மிட்டாய் கவிதைகள்!

கனவும் நட்பும் கவிஞர்களாக!

July 21, 2013

dream poet

கல்லறைக்கும் கூடவே வருவேன்
எனச் சொல்லி
கண்ணீரிலேயே விட்டுச் சென்றவளை
மணவறையில் என் துணையாகக் கண்டபோதும்
கனவுதான் எனத் தெரிந்தும்
கண்களைக் கூடத் திறக்கவில்லை!
கண்விழித்த பின்பு
கனவு மட்டும் என் நனவாக!
என்றாவது இதைப் பார்த்துச்
சிரிக்கலாம் என நினைவில் நின்றவைகளை
மட்டும் எழுதி வைத்தேன்!
இப்போது அதற்குப் பெயரும் சூட்டிவிட்டேன் கவிதை என்று!

friend poet

கண்ட துன்பம்
கண்ணீருக்குத் தெரியும் முன்னர்
காணாமல் போகச் செய்து
எதையும் செய்யாதது போல
என்னருகே வந்து நிற்பான்..
என் பெயரை மறக்கச் செய்து
புனைப் பெயரைப்
பொதுப் பெயராக்கி
நாங்கள் செய்த
கூத்துக்களும் கேளிக்கைகளும்
எழுதி வைக்காத எழுத்துக்களாக!
எழுதிய பின்னர் கவிதைகளாக!


எழுத்தாளர்: எம்.ஆர்.கார்த்திக்